![](https://cdn.lankasririp.com/memorial/notice/202843/062e3be7-335b-4ebf-a56a-fe7101d9a9c9/21-6067063a514fb.webp)
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் அருந்தவராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
மலர்வது உதிர்வது விதியாகினும் மண்ணில்
உதிரா மரண வலி நித்தமும்!
அழுது புலம்பித் தொழுதாலும்
விதியின் மதியில் மாற்றமில்லை
நீ விடுமுறையை நினைத்து பறந்தீர்
நாம் பிரிவை நினைத்து புலம்புகிறோம்!
வாழ்வில் நிலைகுலைய வைத்த பிரிவு
தொலைந்தது ஆனந்தம் மட்டுமல்ல
பாசத்தால் பரிதவித்து நிற்கின்றோம்
விடிவில்லா பயணத்தில் விரைய மறுத்த நாட்களை
எம் நினைவுகளில் தங்கி விட்டாய் நான்கு ஆண்டாய்..!
வாழ்வெங்கும் எம் உயிர் நெஞ்சில் நீ நிறைந்தாய்
கனவுகளற்ற நினைவுகளோடு கடக்கின்ற
ஒவ்வொரு நிமிடமும் உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அப்பா
உங்கள் நினைவுகள் வரும்போது- நாம்
ஒவ்வொரு முறையும் மரணிக்கிறோம்
காலாவதியாகி கண்ணீரை தொடர வைத்து
தொலையாத துயரக் கடலில் தவிக்கும்
மனைவி, பிள்ளைகள்- நிலெக்ஸ்சனா, ஆகாஷ், அக்ஸ்சரா