
யாழ். மானிப்பாயைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Plumstead ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் நாகலோகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றும் உன் பிரிவால்
எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு
அணைந்ததை எண்ணி மெழுகாய்
உருகுகின்றோம்...!
ஆண்டொன்று ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
உங்கள் மறைவால்- நாம் வாடுவதை
யார் எடுத்துரைப்பார்கள்..
உறுதுணையாய் நானிருக்க
உற்ற துணையாய் நீங்கள் இருக்க
யார் கண் பட்டதுவோ- என்னை
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர் !!!
நாம் மறக்கவில்லை உமை என்றும் நினைப்பதற்கு!
அன்பின் ஈரம் காய்வதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
என்றும் உங்கள் நினைவில் மனைவி, மகள், குடும்பத்தினர்.....
Lean on us as much as you need during this time. We're here for you. Shobha Ashok & family Chennai