

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, பிரான்ஸ் Argenteuil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கண்ணீர் அஞ்சலி
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் - அப்பா
கண்ணின் மணி போல் எம்மை காத்த
அன்புத் தெய்வமே - அப்பா
ஆறிடுமோ எங்கள் துயரம்
பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்ப முடியாமல் நாங்கள் இங்கு தவிக்கின்றோம்
முதலாவது ஆண்டு நினைவு நாள் வந்ததோ
எங்கள் தந்தையே
ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நினைவு தான் - அப்பா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே - அப்பா
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாகும் உங்கள் நினைவுகள்
நித்தமும் எங்களுடன் உயிர் வாழும் - அப்பா.
நீங்கள் வழிகாட்டிய பேரப்பிள்ளைகள்
தாத்தாவின் நினைவில் பிரதிகளைப்
பார்த்து எப்போதும் கதைத்துக் கொண்டே இருப்பார்கள்
எவரும் காட்டாத அளவு
அக்கறை, அன்பு, வைத்தீர்கள்.
எங்கு போனீர்கள், எப்போது வருவீர்கள்
என்று வழி பார்த்து ஏங்குகின்றார்கள்.
வீடு தேடி வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று
விருந்தோம்பும் பண்பு கொண்டவர்
எம்மை தூரநோக்கு பார்வையில் வளர்த்து
பிரான்சு மண்ணில் தலை நிமிர்ந்து வாழ வைத்தீர்கள்.
நீங்கள் எங்களை விட்டுச் சென்று
ஆண்டு ஒன்றுதான் ஆனால் நாங்களோ
உங்களைப் பிரிந்து பலயுகங்கள் சென்றது போல்
உணர்கின்றோம்
நீங்கள் எங்கள் மீது காட்டிய அன்பும் அக்கறையும்
பொறுமையும் இனி யாரிடம் பெறுவோம் - அப்பா
தவழ்ந்து ஓடி உலாவித்திரிந்த மண்ணிலும்,
குடி புகுந்த மண்ணிலும்,
புலம் பெயர் மண்ணிலும் மாண்புற்று திகழ்ந்தாய்
பிறந்த வீடும் உங்களால் பெருமை பெற்றது
புகுந்த வீடும் உங்களால் புன்னகை பூத்தது
அன்பின் திருவுருவாய், பாசத்திற்கும்,
நெறி தவறாத வாழ்க்கை பண்ப்பிற்கும் ஓர் இருப்பிடமாய்,
சீர்தூக்கி ஆராயும் அறிவுக்கு ஓர் சிகரமாய்,
பொறுமைக்கு பூமியாய்,
அமைதியின் சின்னமாய் திகழ்ந்த நீங்கள்.
விண்ணில் சென்று ஒருவருடமாகின்றது
வாழ்வை, எமக்காக மெழுகுவர்த்தி போல
உருக்கி வாழ்ந்தீர்கள், வருடத்தின் கடைசி நாள்,
படைத்தவனுக்கு நன்றி கூற தயாராகும்வேளையில்,
எமக்கெல்லாம் நன்றி கூற மனம் எப்படி
"ஆம்" என்றது? - அப்பா
நீங்கள் இல்லாமல் எங்கள் குடும்பம் பூரணமின்றி தவிக்கிறது
நெஞ்சம் உருகி ஆண்டவரை வேண்டுகின்றோம்.
புன்சிரிப்பினால் எல்லோரையும் கவர்ந்து
யார் மனதையும் புண்படுத்தாமல் எல்லோருக்கும்
உதவும் உங்களை காலன் ஏன் எங்களிடம்
இருந்து வருட இறுதி நாளில் இழுத்துச் சென்றதேனோ
உங்கள் வார்த்தைகள் எங்களை வழிநடத்தும் - அப்பா
இன்று நீங்கள் இல்லாமல் தவிக்கின்றோம் - அப்பா
காலங்கள் சென்றிடினும் உங்கள் நினைவுகள் அழியாது
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உறவினர்கள், நண்பர்கள்.
திரு இலங்கைநாதனின் மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். அவரது ஆன்மா இறைவனில் நித்தியமாய் இளைப்பாற வேண்டிநிற்கிறோம். - நாரந்தனை...