கனடா Brampton ஐப் பிறப்பிடமாவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அருண் விக்கினேஸ்வரராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
விடியாத இரவோடு விலை பேசும் விடியல்கள்
புரியாத கதைகளில் மௌனித்துப் போகின்றன
சொல்லி விட முடியாத சோகச் சுமைகளைச் சுமந்து
விழியோரம் துளிர்க்கும் கண்ணீர்த் துளிகள் படிந்த என்
தலை அணைக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்
உன்மீது நான் கொண்ட அன்பின் ஆழம்...
காலம் முழுக்க சேர்ந்தே வாழ்வோம் என்றாயே
செல்லெணாத் துயரில் என்னை தன்னந்தனியே தவிக்க விட்டதேனோ
தினம் தினம் உன் நினைவு என்னுளே வாட்டுதடா
அன்பின் மறு உருவமே அருண்
உன்மீது நான் கொண்ட
அன்பின் ஆழம்
ஈராண்டு கடந்த பின்னும் துளியேனும் குறையவில்லை
என் ஆயுள் உள்ளவரை உன் நினைப்புடனும்
நம் காதல் சின்னமான குழந்தையுடனும் காலத்தைக் கழித்திடுவேன்
மறு ஜென்மன் உண்டென்றால் மீண்டும் உன்னோடே இணைய வேண்டும்
இழந்ததெல்லாம் பெற வேண்டும்
அப்போதாவது
என்னை இடைநடுவே விட்டுச் சென்று விடாதே...
இப்படிக்கு
உன் நினைவை மட்டுமே சுமக்கும்
உன்
நிவி, நிவான்!
My brother, you mean so much to me and my daughter. You were the best from the rest. Ahh. you ARE a sweetheart and definitely one of kind. Rest in peace with your brother. don't be cooling it...