கனடா Brampton ஐப் பிறப்பிடமாவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அருண் விக்கினேஸ்வரராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-10-2023
அன்பினால் ஒன்றுபட்டு கருத்தினில் ஒருவராகி!
உறவுகள் கூடிநிற்க! உற்றார்கள் வாழ்த்துரைக்க
இருகரம் சேர்த்து இதயத்தில் அனைத்து
இருமனம் ஒன்றி திருமண பந்தத்தில்
அன்றில் பறவைகள் போல் இணையற்ற அன்போடு
சிறகடித்துப் பறந்த எம்மை!
நட்ட நடு இரவில் எது வந்து பிரித்தது?
காலன் அவன் சதியா கடவுளின் ஆணையா!
பார்போற்ற வாழ்ந்த என் கண்ணே!
என்னைவிட்டு ஏன் பிரிந்தாய்
காதலால் ஒன்றுபிட்டு கருத்தினில் ஒருவராகி
கன்னித்தாயாய் நான் கருவுற்ற செய்தி அறியாமலே
காலன் கையில் கொடுத்துவிட்டு
நித்தம் நித்தம் கலங்கித் தவிக்கிறேனே!
உன்னைப் பிரிந்த பின் உலகில் எனக்கென்ன வேலை என்று
ஓராயிரம் தடவை நான் நினைத்த வேளையிலே
பந்தை உதைத்து நீ பதக்கம் பெற்றதுபோல்
உன் உதிரத்தில் உதித்தவன் என
உதிரத்தில் உதைத்து நின்றான் அன்பே!
என் அருணே! என் உலகமே நீயானாய்
இன்று உன் மகன் உலகில் உதித்து உன் முகம் தேடுகிறான்!
யார் முகத்தை காட்டிடுவேன் அப்பா! அப்பா! என்று
ஆசையுடன் தேடும் உன் மகனின் மழலை மொழிகேட்டு
மீண்டும் வரமாட்டாயா? உற்றார்கள் கூடிநிற்க!
உறவுகள் வாழ்த்துரைக்க உன் மகன் வளர்கிறான்!
வெளிச்சமில்லா கருவறையில் வீற்றிருக்கும் கடவுளைப்போல்!
ஓடி வருவாயோ அப்பா உன் மகனை காண்பதற்கு!
ஒரு ஜென்மம் போதாதே உன் பிரிவை தாங்குதற்கு!
நித்தம் வணங்கி நின்றோம் உன் நிழல் வடிவம் தாங்கிநின்றோம்
நிஜத்தை தொலைத்துவிட்டு இறைவனடி சரணடைந்தோம்!
ஓம் சாந்தி காத்திருக்கும் தாயும் சேயும் நிவேதா, நிவான்
அப்பாவை ஏங்கித் தவிக்கும் நிவான்
அப்பா! ஏன் அப்பா என்னை விட்டு கடவுளிடம் சென்றுவிட்டீர்கள்
அப்பா நான் அம்மாவின் கருவறையில் இருக்கும் போது உங்கள் குரல் ஒலித்தது, என் இதயத்தில் உங்கள் குரல் பதிந்தது ஏன் அன்பா என் குரல் கேட்காமலேயே கடவுளிடம் சென்றுவிட்டீர்கள்.
உலகத்தில் உங்களுக்கு பிடித்தது மூன்று
என் அம்மா உங்கள் நிவி,
உங்கள் சொக்கன்,
உங்களுடைய Dog
உங்கள் ஆசை என் இலட்சியம் அப்பா நீங்கள் உயிருடன் இருந்திருந்தால் என்னைத்தான் பிடித்திருக்கும். அப்பா! அப்பா! ஓடி வாங்கோ அப்பா உங்கள் தோள் மீதும் மடி மீதும் உறங்க வேண்டும் உங்கள் மகன் அப்பா ஒரு முறை வரமாட்டீர்களா? கட்டியணைத்து முத்தம் தர என் அப்பா வேண்டும் என் அம்மா என்னை பத்து மாதம் எவ்வளவு துன்பத்தையும் கஸ்டத்தையும் தாண்டி என்னை இவ் உலகத்திற்கு கொண்டுவந்தார் அப்பா நீங்கள் கடவுளிடம் போவீர்கள் என்று தெரிந்துதான் என் அம்மாவிற்கு துணையாக என்னை இவ் உலகத்திற்கு அனுப்பிவிட்டு நீங்கள் கடவுளிடம் சென்று விட்டீர்களா? இனி எல்லாமே என் அம்மா தான் I Love அப்பா
நான் உங்களை Miss பண்றேன்
(அருண் குட்டி நிவான்)
சித்தாவை ஏங்கி தவிக்கும் சேலன்
சித்தா உங்கள் சேலன் நான் கருவறையில் இருந்து வெளி உலகம் வரும் போது என்னை முத்தமிட ஓடி வந்தீர்கள்
நான் என்ன பாவியோ! என் சித்தாவை கடவுள் எடுத்து விட்டான் சித்தா ஓடி வாங்கோ தவியாக தவிக்கும் சேலன் குட்டி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
My brother, you mean so much to me and my daughter. You were the best from the rest. Ahh. you ARE a sweetheart and definitely one of kind. Rest in peace with your brother. don't be cooling it...