

பத்மராணி ஆறுமுகதாஸ்:-
யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மராணி ஆறுமுகதாஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்களின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...
ஆறுமுகதாஸ் கந்தையா(இறப்பு: 23-04-2020):-
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை பொன்னையா ஒழுங்கை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகதாஸ் கந்தையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு ஐந்து போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை ஐயா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் ஐயா!
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
குடும்பத்தினர்