

பத்மராணி ஆறுமுகதாஸ்:-
யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மராணி ஆறுமுகதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள்! கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...
ஆறுமுகதாஸ் கந்தையா(இறப்பு: 23-04-2020):-
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை பொன்னையா ஒழுங்கை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகதாஸ் கந்தையா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு மூன்று முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
Daddy and Amma, Thank you for everything. I really miss you both.