

பத்மராணி ஆறுமுகதாஸ்:-
யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மராணி ஆறுமுகதாஸ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு குல விளக்கே அம்மா
எமை விட்டு பிரிந்தது ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்
கண்ணின் இமை போல் எமை காத்து
துன்பம் துயரம் தெரியாது எமை வளர்த்து
தரணியிலே எமை உயர வைத்து
இன்பமுடன் நாம் வாழ வழிகாட்டி
எமை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்று ஆனதம்மா
இரண்டு
ஆண்டு காலமதில் உனை பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உனை மறவாமல்
நாம் வாழ்கின்றோம்
எத்தனை ஆயிரம் உறவுகள்
எமை அணைத்திட இருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
ஆறுமுகதாஸ் கந்தையா(இறப்பு: 23-04-2020):-
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை பொன்னையா ஒழுங்கை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகதாஸ் கந்தையா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்குடும்பத்தின் ஒளி விளக்கே
எம்வாழ்வின் விடிவெள்ளியே
புன்னகை பூத்த உங்கள் முகமே...
அன்பு தெய்வத்தின் இனிய
நினைவுதனை
மனதில்
சுமந்து வாழுகின்றோம்!
விண்தேடி விரைந்து சென்றதனால்
புண்பட்ட இதயத்தை ஆற்ற
வழியின்றி
கண்ணீரைக்
காணிக்கை ஆக்குகின்றோம்
நேற்று நடந்தது போல் நினைப்பு
ஆனால் 4 ஆண்டுகள்
நிறைவுற்ற போதும்
என்றும்
உங்கள் நீங்கா நினைவுகளை
சுமந்தவராய்
உங்கள் ஆத்மாவின்
சாந்திக்காய்
பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Daddy and Amma, Thank you for everything. I really miss you both.