

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தற்பரானந்தம் அவர்கள் 08-05-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சண்முகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவாநந்தினி(பிரதி ஆணையாளர் உள்நாட்டு இறைவரித் திணைக்களம்- யாழ்ப்பாணம்), சிவகுமார்(கனடா), சிவதர்சினி(பிரான்ஸ்), சிவானந்தறஜனி(பிரித்தானியா), சிவானந்தன்(பிரித்தானியா), சிவரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நீலாம்பிகை(இளைப்பாறிய உப அதிபர் சென். ஜோன் பொஸ்கோ) மற்றும் கனகரத்தினம்(இளைப்பாறிய சிரேஷ்ட வரி உத்தியோகத்தர்), இராசரத்தினம், காலஞ்சென்ற புருஷோத்தமன் மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நாகராசா மற்றும் சகுந்தலா, நாகேஸ்வரி, நிர்மலா, சண்முகநாதன், கணேசலிங்கம் மற்றும் காலஞ்சென்றவர்களான பூரணானந்தசிவம், குணவதி, பூபதியம்மாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தெய்வசீலன்(இளைப்பாறிய புள்ளிவிபரத் திணைக்கள உத்தியோகத்தர்), ஜெயந்தினி(கனடா), கிரிதரன்(பிரான்ஸ்), நித்தியநாதன்(பொறியியலாளர்- பிரித்தானியா), அபிராமி(பிரித்தானியா), பிரிந்திகா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஹானா, சுவர்ணசபேசன், விபீசன், பிரவீன், வித்தகன், ஆத்திகன், அருண், அஞ்சலா, ஆதிரா, அரண், விகாசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிவியாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புசார் பகிர்வில் வாழ்வாங்கு வாழ்ந்த ஆறுமுகம் தற்பரமானந்தம் அவர்களது காலமாகிய தகவலறிந்து அதிர்வுற்றோம். உறவினர்களாக நெருங்கி உறவாட முடியாது உலகின் பலபாகங்களிலும் சிதறிய வாழ்வில் நாம் இத்துயர்...