Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 MAY 1961
இறப்பு 02 SEP 2011
அமரர் ஆறுமுகம் சிவசுப்பிரமணியம்
வயது 50
அமரர் ஆறுமுகம் சிவசுப்பிரமணியம் 1961 - 2011 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 15-09-2026

யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையை பிறப்பிடமாகவும், France - ALBI ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சிவசுப்பிரமணியம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி. 

வாழ்க்கை என்பது இறைவன் அவன்
வகுத்த வரைதானே
அடுக்கடுக்காக ஆண்டுகள்
 பதினைந்து சென்றன
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே நாம்!

அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு
பிறப்பிலும் எமக்கே அப்பாவாய்
பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது!

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices