திதி:28/05/2026
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சிவகுருநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் உறைவிடமான
அன்புள்ள அப்பாவே!!
ஒளி சிந்தும் ஆதவனாய்
நல்ல வழி காட்டியதால்
அவ்வழியே வாழ்கின்றோம்
இமைப் பொழுதும் உமை மறவோம்.
நீங்கள் எம்மைப் பிரிந்து மறைந்து
இன்றுடன் ஆண்டு இரண்டு ஓடிவிட்டன.
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எங்களுக்கு பொற்காலமாகும், நற்காலமாகும்.
கடந்த காலம் எக்காலத்திலும்
திரும்பிவரப் போவதில்லை
ஆனாலும் நீங்கள் எம்மை வாழவைத்து
மகிழ்வித்த காலத்தில் விட்டுச் சென்ற
ஞாபகங்கள் ஏராளம் ஏராளம்.
ஒவ்வொரு ஞாபகச் சின்னமும்
ஒவ்வொரு கதை சொல்லும்.
அவற்றுள் உங்கள் திருமுகத்தை
தினமும் காண்கின்றோம்.
உங்களை எங்களால் மறக்க முடியாது.
மறக்கவும் மாட்டோம் மறவோம் மறவோமே!
ஆண்டவன் திருவடியில் அமைதியாய்
நீங்கள் வாழ ஆண்டாண்டாய்
உங்கள் நினைவுடனே பிரார்த்திப்போம்..!
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 28-05-2026 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
My heartfelt sympathy to you and yours at this sad time. Pleace accept my sincere condolences.