
திதி:09/06/2025
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சிவகுருநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே உருவான எங்கள்
அப்பா ஆண்டுகள் ஒன்று
ஆச்சுதப்பா இறைவன் உங்களை
விரைந்தே ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம்
நீங்கள் தானே உங்களுக்கு
நிகர் வேறு யாரப்பா?
ஊரு உறங்கும் நேரத்திலும்
எம் மனம் உறங்கவில்லை
எங்களுக்குள் நீங்கள் வாழ்வதால்
நாம் வாழ்கின்றோம்!!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்!!
ஒருமுறையேனும் உங்கள் முகம்
பார்த்து விடமாட்டோமா அப்பா
ஓடி வந்துவிட மாட்டீர்களா?
அப்பா எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அமரர் ஆறுமுகம் சிவகுருநாதன் (சின்னட்டி)
அவர்களின் முதலாம் ஆணடுத் திவசம் எதிர்வரும் (09.06.2025) திங்கக்கிழமை பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
மண்டைதீவு.
94779480059.
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.