
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், அல்லாரை தெற்கை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவகுரு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயப்பனை அகத்திருந்தி ஆலயம் அமைத்தே
வழிவழியாய் வழிபட்ட ஆலயக்குரு
சிவகுருப் பெரியோன்
பக்தி வயலாக்கி உள்ளமதை
பண்பும் அன்பும் பயிரிட்டு
அருளோடு விபூதி வழங்கிய செம்மல்
பிள்ளைச் செல்வங்களை அன்பிலே வளர்த்து
பேறுபல பெறச்செய்த திறலோன்
அன்பு மனைவியின் அழியாச்சின்னம்
அபிராமி பாலர் பாடசாலை
அங்கே அன்பின் ஊற்றை
நினைவுறுத்தும் கிணற்றின் அமிர்தநீர்
பயன் பெறுவோர் பலர்
அவ்வண்ணம் அறம் பல செய்தீர்
ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு
வாழ்ந்து- எங்களை வாழ
வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட உங்கள்
ஆத்மா சாந்தி அடைய எங்கள்
இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்......!!!
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.