Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 JAN 1932
இறப்பு 18 FEB 2019
அமரர் ஆறுமுகம் சிவகுரு (காவடி சிவகுரு)
வயது 87
அமரர் ஆறுமுகம் சிவகுரு 1932 - 2019 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், அல்லாரை தெற்கை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவகுரு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐயப்பனை அகத்திருந்தி ஆலயம் அமைத்தே
வழிவழியாய் வழிபட்ட ஆலயக்குரு
சிவகுருப் பெரியோன்
 பக்தி வயலாக்கி உள்ளமதை
பண்பும் அன்பும் பயிரிட்டு
அருளோடு விபூதி வழங்கிய செம்மல்

பிள்ளைச் செல்வங்களை அன்பிலே வளர்த்து
பேறுபல பெறச்செய்த திறலோன்
அன்பு மனைவியின் அழியாச்சின்னம்
அபிராமி பாலர் பாடசாலை
அங்கே அன்பின் ஊற்றை
நினைவுறுத்தும் கிணற்றின் அமிர்தநீர்
பயன் பெறுவோர் பலர்
அவ்வண்ணம் அறம் பல செய்தீர்

களிப்பான வாழ்விற்கு
காவடி கட்டிய எங்கள் தெய்வமே
அணையாது ஒரு போதும்
நாம் கொண்ட பாசம்
தேயாமல் வளருமிது தெய்வீக பாசம்
இயற்கையின் அசைவுகளில்-உம்
உணர்வுகளை நுகர்ந்து
உம்பாதம் மலர்தூவி
வணங்குகின்றோம்

என்றும் நினைவு சுமந்து
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices