2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆறுமுகம் கிருஸ்ணமூர்த்தி
ஓய்வுபெற்ற கிளை முகாமையாளர்- நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
வயது 75

அமரர் ஆறுமுகம் கிருஸ்ணமூர்த்தி
1946 -
2022
சுழிபுரம், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுழிபுரம் கல்லை வேம்படியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கதிரமலைச் சிவன்கோவிலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் கிருஸ்ணமூர்த்தி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பை விதைத்த அப்பாவே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஈராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
அப்பா இனி காண்பது எப்போது?
ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்றழைக்க நீங்கள் எனதருகில் இல்லையே!
இன்றும் என்னை நிழல் போலத்
தொடர்ந்து வரும் அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகின்றேன் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்