யாழ். சுழிபுரம் கல்லை வேம்படியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கதிரமலைச் சிவன்கோவிலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் கிருஸ்ணமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது
உங்கள் உடல் மட்டும் தான்
பிரிந்து போனது
ஆனால்
உங்கள் உயிர் என்றும் எங்களுடன் தான்
வாழ்ந்து கொண்டிருக்கும்
விண்ணிலே வாழ்ந்தாலும் எமக்கு விளக்காக இருப்பவரே
விண்ணோர்கள் மத்தியிலே நீங்கள் மகிழ்வா இருந்திடவே
மண்ணிலே நாமிருந்து மனமிரங்கி வேண்டுகிறோம்
பூத்திருந்த இடங்கள் எல்லாம்
பாலைவனம் போல் தெரிய
நடந்து போன பாதையில்
உங்கள் கால்தடங்களே
விடிகின்ற வேளைகளில்
கண்ணெதிரே நிற்பவர் இல்லையே
என ஏங்க கண்ணீர் வழிகின்றதே
சூரியன் உதிக்க மறந்தாலும்
கடலலை கரைதொட மறந்தாலும்
கண்கள் இமைக்க மறந்தாலும்
இதயம் துடிக்க மறந்தாலும்
தங்களின் நினைவுகளை நாங்கள் எப்படி மறப்போம்?
நாட்கள் வருடங்கள் கடக்கட்டும்
வயதுகள் ஓடிச் செல்லட்டும்
நீங்கள் அருகில் இருப்பதாய்
வாழ்க்கையை தொடர்கின்றோம்