2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆறுமுகம் கதிரேசபிள்ளை
(சிவபாதம்)
இளைப்பாறிய அதிபர்
வயது 82

அமரர் ஆறுமுகம் கதிரேசபிள்ளை
1936 -
2019
களுவாஞ்சிக்குடி, Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் கதிரேசபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
mamavin athma sthanthiyadaya alntha annuthapankal