

முல்லைத்தீவு. துணுக்காய் கொக்காவில் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே பாசத்தின் உறைவிடமே எங்கள் அப்பா
எங்கள் வீட்டு ஒளிவிளக்கு ஒளியிழந்த நாள் இன்று!
எம் வாழ்க்கை இருளில் மூழ்கிய நாள் இன்று!
ஆண்டொன்று ஆனாலென்ன ஆயிரம் நாள்தான் போனாலென்ன
எம்மை விட்டகலாது உங்கள் நினைவு!
அன்போடு எமை அரவணைத்த அப்பாவே!
உங்கள் அன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை
பண்போடு எமை பேணி வளர்த்து
கண்ணோடு கல்வியும் கற்க வைத்து
மனம் தளரா தைரியமும் எமக்களித்து
இனிய இல்லற வாழ்வும் தேடித்தந்து
கண்ணின் மணி போலக் காத்து நின்று- இப்போ
நாம் காணா தேசம் போனதெங்கே? அப்பா
உறவின் அர்த்தம் புரிந்து
உணர்வால் ஒன்றாய் இருந்தீர்களே
இறுதிவரை எல்லோருக்கும் உதவிகள் செய்து உயர்த்தியவரே
அப்பா இருக்கிறார் என்று எதற்கும் கலங்காது இருந்தோம்
இனி உள்ளம் செயலிழந்து போகையில்
உங்களை தேடும் போதெல்லாம்
யாரிடம் போய் நிற்போம் அப்பா!
உயிர் உள்ள காலம் வரை
உங்கள் நினைவுகள் சுமந்த படி இருப்போம் அப்பா!
உங்கள் இனிமையான நினைவுகளை சுமந்தபடி இருக்கும்
ஆருயிர் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உடன் பிறப்புக்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.