Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 07 JUL 1966
இறப்பு 19 MAY 2021
அமரர் அருமைநாதன் பாக்கியநாதர் (அருமை)
வயது 54
அமரர் அருமைநாதன் பாக்கியநாதர் 1966 - 2021 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட அருமைநாதன் பாக்கியநாதர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பே ஆருயிரே எனதருமை ஆசை நாயகனே
அன்போடு எனையென்றும் அருகிலிருந்து காத்தவரே
துன்பம் எதுவும் நான் கண்டதில்லை எம் மணவாழ்வில்
கண் கண்ட கணவன் என களிப்போடு நானிருந்தேன்
இறுதி வரை நீர் எனக்கு கை கொடுப்பீர் என்றிருந்தேன்
இறுதி நேரம் வந்தவேளை உமதருகில் நானில்லை
மனக்கவலையோடு வாழ்கின்றேன் என்றும் உயிருள்ள உம் நினைவில்

அப்பாவே! எமதருமை அப்பாவே!
எப்போதும் எமைக்காத்த எம் தந்தாய்!
ஆலம் விழுதுகள் போல எமைத்தாங்கிய அன்பு அப்பாவே!
கல்வியே எம் வாழ்வில் பெரிது என்று அறிவுரைத்தீர்
கேட்டதெல்லாம் எமக்கு பெற்றுத் தந்தீர்
இன்று கேட்பதற்கு உம்மை தேடுகின்றோம்

இரண்டு பிள்ளைகளை இனிதாகப் பெற்றெடுத்தீர்
இணையில்லா கல்விதனை இதமாக ஊட்டி நின்றீர்
வாழ்வின் வளமையிலும் இறைமகன் யேசுவே பெரிது என்றீர்
மகிழ்வோடு வாழத் தேடுகின்றனர் உம் முகத்தை

பெற்றோரையும் உற்றாரையும் உறவென்று பேணி வந்தீர்
உம்மோடு வாழ்ந்த வளர்ந்த உம் சகோதரர் கண்ணீராய்
வடிக்கின்றோம்
இறுதி நேரம் வந்த வேளை உமதருகே நாமும் இல்லை
விண்ணகத்தில் வாழும் உம் பெற்றோரையும், சகோதரரையும்,
உறவினரையும் காண அதி வேகமாக விரைந்தீரோ
கண்ணின் மணிபோல நீர் வளர்த்த உம் பிள்ளைகள்
கனவுகள், கற்பனைகளை நிஜமாக்கி, பல்கலைக்கழகம் சென்று பட்டங்கள்
பெறுவதைப் பார்த்து மகிழ பல இருக்க
பாதியினில் ஏன் சென்றீர் விண்ணகத்திற்கு

எம்மைவிட்டு நீங்கியது உம் உடலே அன்றி
உம் நினைவுகள் அல்லவே! உம் நினைவுகளில் நாம் என்றும் இணைந்திட
ஆண்டவர் யேசுவின் சந்நிதியில் நீர் அமைதியாய் துயில் கொள்ள
நித்தமும் நாம் ஆண்டவரை வேண்டுவோம். ஆமேன்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

31ம் நாள் விண்ணக வாழ்வின் நினைவஞ்சலியும், திருப்பலியும்
நாள்: 19.06.2021
கனடா நேரம்: 09:00AM

 Zoom meeting ID: 84730393919
Passcode: 353549

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 32 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.