யாழ். நெடுந்தீவு மத்தியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் சிவகுருநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் பல்கலைகழக கழக நண்பி தயாமதிக்கும் அவரது குடும்பத்தினர் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். தந்தையாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம். - பாக்கியறெயினோலட்