1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருளானந்தம் சிவகுருநாதன்
(சிவத்தார்)
செட்டிகுளம் விவாக பிறப்பு, இறப்பு பதிவாளர், சமாதான நீதவான்
வயது 91
அமரர் அருளானந்தம் சிவகுருநாதன்
1931 -
2022
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நெடுந்தீவு மத்தியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளானந்தம் சிவகுருநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை விரைந்தே ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்!!
ஒருமுறையேனும் உங்கள் முகம் பார்த்து விடமாட்டோமா
அப்பா ஓடி வந்துவிட மாட்டீர்களா? அப்பா
எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் பல்கலைகழக கழக நண்பி தயாமதிக்கும் அவரது குடும்பத்தினர் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். தந்தையாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம். - பாக்கியறெயினோலட்