Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 JAN 1930
இறப்பு 05 FEB 2021
அமரர் அரியரெத்தினம் பத்மநாதன்
Retired Public Health Inspector, Sri Lanka
வயது 91
அமரர் அரியரெத்தினம் பத்மநாதன் 1930 - 2021 மலேசியா, Malaysia Malaysia
Tribute 29 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் கிழக்கு, கொழும்பு தெஹிவளை, பிரித்தானியா Sutton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியரெத்தினம் பத்மநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் இரண்டு ஆன
போதிலும் நீங்களின்றிய துயரங்கள்
இன்னும் ஆறவில்லை அப்பா!!
 அன்பு பெருக அணைத்த கரங்களும்
 நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
 இன்பம் தரும் தங்கள்
இனியசொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

இரண்டு வருடங்கள் உருண்ட
போதிலும் உங்களின் நினைவுகள்
மனதில் ஓயாத அலைகளாய் ஒவ்வொரு
 நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின்
ஞாபகம் அப்பா மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்!
 உங்களின் மீதான எங்களின்
 தேடல்கள் எங்கள் உயிர் மூச்சு
 உள்ளவரை ஓயாது!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.