

யாழ். கரவெட்டி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரியரட்டினம் வைகுந்தநாதன் அவர்கள் 10-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அரியரட்டினம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுசிலா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பிரபு, நீதிராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மதியாபரணம், காலஞ்சென்ற மைசூர்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரேணுகா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயக்குமார்(கோண்டாவில்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஜஸ்நிகா, அவிஸ்நிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணி முதல் பி.ப 04:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கியான் காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திரு வைகுந்தநாதனுக்கு நான் பிறவியால் அயலவனும் உறவினனும் ஆவேன். எனது பெயர் வாரித்ம்பி சாந்தலிங்கம். பிறந்த நாள் தொடக்கம் நான் மேல்படிப்புககு பேராதனை பல்கலைக்கழகம் போகும் வரை தினமும் காலையும்...