யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியரட்ணம் யசோதரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் எட்டு கரைந்தோடிய போதும்
உம் நினைவுகள் எம்மை விட்டு அகலவில்லை...
எங்களை எல்லாம் தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண
வருவாயா ஓர் கணமே?
கலங்கும் கண்களுடன் கனத்த இதயத்துடன்
நாங்கள் உம் முகம் தேடி குரல் தேடி
வேதனையில் ஏங்கித் தவிக்கின்றோம்
காலங்கள் கடந்து சென்றாலும்,
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்புப் போல்,
அருகிலே நீ வாழ்வதை நாம் உணர்கிறோம்
கடலுடன் என்றுமே வாழும் அலைகள் போல்
எமது உயிரில் கலந்த எம் உறவே..!
உன் ஞாபகங்கள் வானத்தில் உள்ள
மேகம் போல் என்றுமே அழியாது, எமது உயிரே..!