

மாமாவுக்கு சில வரிகள்!! மாமா என்பது மகிமையான உறவு.! அதை அனுபவிக்க நமக்கு கொடுத்து வைக்கவில்லைஏமாற்றமே! ஒரு நாள் நேரிலே பார்த்தேன்,ஆனால் பேசமுடியவில்லை.அவ்வளவு தான் நமக்கு கிடைத்தது என்று இருந்து விட்டோம்.கடவுளின் கிருபையால் சதீஸ் அண்ணா மூலம் மீண்டும் நமக்கு உறவாடும் சந்தர்ப்பம் கிடைத்தது சந்தோஷம். உங்களை நேரிலே வந்து பார்த்து,பேசி,ஆசீர்வாதம்பெறலாம் என்று எதிர்பார்த்திருந்தோம். அதிலும் காலதாமதத்தால் ஏமாற்றமே! ஆனாலும் தொலைபேசி மூலம் என் தாயாரோடு பேசி, சில கடமைகளை முடித்து விட்டு சென்றது நிறைவான சந்தோஷம்.அதற்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள் பல. கடைசியாக உங்கள் இறுதி சடங்கிலும் எமது கடமைகளை நிறைவேற்ற ஆசைப்பட்டாலும் முடியாத நிலை. அதிலும் ஏமாற்றமே!! ஆனாலும் ,ஆத்துமாவிலே நிறைவான சந்தோஷத்தோடு வழியனுப்புகிறோம். உங்கள் ஆத்தும சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.ஃ

We express our deepest sympathy to his Children, our friends. As a Teacher , he served our community to have better human. He has raised his children to achieve highest standards in life. All proud...