யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை ஜெயக்குமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பாசத்தின் உறைவிடமே
பண்பின் ஒளிவிளக்கே
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த
உறவுகளை கைவிட்டு சென்றதேனோ
பிரிவால் வாடிநிற்கின்ற உள்ளங்கள்
தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே
நின் உறவின் அடிதேடி துடிக்கின்றதே
மண்விட்டு மறைந்து நீங்கள்
விண்நோக்கி சென்றாலும்
கண்விட்டு மறையாமல்
கனகாலம் இருப்பீர்கள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
A great soul never dies. Now he is living in our heart. God has given us a loving father. He has completed his duties on the earth perfectly. Be grateful to his life and live with his memories.A...