Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 13 DEC 1931
விண்ணில் 27 FEB 2021
அமரர் அப்பாப்பிள்ளை நடராஜா (செல்லக்கிளி, தம்பி மாமா)
ஓய்வுபெற்ற ஓவசியர் முல்லைத்தீவு
வயது 89
அமரர் அப்பாப்பிள்ளை நடராஜா 1931 - 2021 இராசாவின் தோட்டம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 02-03-2026

யாழ். இராசாவின் தோட்ட வீதியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளை, கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அப்பாப்பிள்ளை நடராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்க்கை என்னும் பாதையிலே
என்னோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஐந்து வருடம் முடிந்தாலும்
உங்கள் நினைவுகள் என்னை விட்டு
விலகாது அப்பா!

ஈடில்லா என் பொக்கிஷம்
நீங்கள் தானே உங்களுக்கு நிகர்
வேறு யாரப்பா?

அன்பு ஒன்றை வாடகையாய்
கொடுத்து என் நெஞ்சினில்
வாழ்கிறாய் இன்று!

 தூண்டில்பட்ட மீனாய் துடிக்கின்றேன்
 எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவு என் நெஞ்சை
விட்டு பிரியாது அப்பா

இன்று பிரிவு என்னும் துயரால்
ஐந்து ஆண்டு ஓடி மறைந்தாலும்
என் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்