

திதி: 16-02-2022
யாழ். இராசாவின் தோட்ட வீதியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளை, கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அப்பாப்பிள்ளை நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் ஒன்றைத் தந்தீர்கள் எங்களுக்கு
உடன் பிறந்தவர்களை தந்தீர்கள் எங்களுக்கு
உறவுகளை தந்தீர்கள் எங்களுக்கு
உன்னதமான வாழ்வைத் தந்தீர்கள் எங்களுக்கு
இன்று எங்களை திக்குத்தெரியாத காட்டில்
விட்டு சென்றதுதான் ஏனோ?
எங்கு பார்த்தாலும் உங்கள் நினைவுகள் என்றும்
ஏங்கித் தவிக்கின்றோம் ஏங்கி நிற்கின்றோம்
உங்கள் அரவணைப்புக்காக
எங்கள் உயிராக வாழ்ந்து எம் உணர்வோடு
கலந்த அப்பாவே நீங்கள் இல்லையென்பது இன்னமும்
தான் ஏற்க மறுக்கிறது எம்மிதயம் – ஏனெனில்
நீங்கள் எம் உள்ளங்களில் வாழ்கின்றீர்கள்
உங்களை போன்ற உருவம் கொண்ட யாரை
பார்த்தாலும் எங்கள் கண்களில் கண்ணீர் வருகின்றது அப்பா
எங்களுக்கு பாசம் காட்டுவதற்கு அப்பா இல்லையே
என்று நினைக்கும் போதெல்லாம் அழுகின்றோம்
எமக்கு ஆறுதலே நீங்கள் தானே அப்பா ஆறுதல் எமக்கேது
ஆறுதலை தந்திடவே திரும்பி நீங்கள் வந்திடய்யா
கண்களில் நீருமில்லை காத்திருக்க பொறுமையுமில்லை
உங்கள் நினைவு மட்டும் மாறவில்லை மாறவில்லை
எம் வாழ்வில் விளக்கேற்றிய எங்கள் அன்பு அப்பா
எம்மை விட்டு நெடுந்தூரம் சென்றதேனோ
அப்பா என்று அழைக்க அவனியில்
இன்று நீங்கள் இல்லை
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
எமக்கு அப்பாவாக நீங்கள் வரவேண்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை மன்றாடுகின்றோம்
Our deepest condolences go out to you & your family during this difficult time.