யாழ். இராசாவின் தோட்ட வீதியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளை, கொக்குவில் ஆகியே இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை நடராஜா அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நரசிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளா(கனடா), சுரேஷ்குமார்(கனடா), சியாமளா(கனடா), ஆனந்தகுமார்(கனடா), பிறேமளா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கனகம்மா மற்றும் பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாளகாந்தன், ஆனந்தி, விமலதாஸ், யாமினி, மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரணி, தக்ஷா, மாதேஷ், அஸ்வினி, வர்சினி, சேயோன், நிலாந்தி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences go out to you & your family during this difficult time.