1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
முல்லைத்தீவு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Osnabruck, Kettenkamp ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனி சின்னத்துரை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
கணப்பொழுதும் எண்ணவில்லை - எம்
கலங்கரை விளக்கே.....
அன்புடனும் பண்புடனும்
பாசத்துடனும் வழி நடத்திய – எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா….
நீங்கள் இல்லாத உலகம் என்றும்
இருள் மயமானது,
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை?
உங்கள் பிரிவைத் தாங்குமா எங்கள் இதயம்?
உங்களை நினைக்கும் போது
வரும் கண்ணீரை நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்