யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனி பெர்னாண்டோ அன்ரன் சகாயநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
கலங்கும் கண்களுடன் கனத்த இதயத்துடன்
நாங்கள் உமது முகம் தேடி குரல் தேடி
வேதனையில் ஏங்கித் தவிக்கிறோம்..
கடலுடன் என்றும் வாழும் அலைகள் போல்
உமது உயிரில் கலந்த எமது உள்ளமோ
உமது ஞாபகங்களோ எங்களை வாட்டுகிறது
பாசத்தால் எங்களை அணைத்துக் கொண்ட
அன்பு உருவே
நேசம் கொண்ட எமது நெஞ்சங்கள் உமது
அன்பு தேடி துடிக்கிறதே
நாங்கள் பத்தும் பத்து முத்துக்களாக வாழ்ந்து
வந்தோம் யார் கண் பட்டதோ தெரியவில்லை
உமது அன்பு சிரிப்பு
உமது தனித்துவமான நெளிப்பு
கண்களை மூடினால் உமது உருவம் வந்து
வந்து போகுதே
நாங்கள் செய்வதறியாது திசை
தெரியாது திகைத்து நிற்கிறோம்..
அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் தொலைபேசியின் ஊடாகவும், சமூக வளைத்தளங்கள் மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் எங்களுக்கு அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள் அனுப்பியவர்களுக்கும் எமக்கு உணவு தந்து உபசரித்தவர்களுக்கும் அன்பு காட்டிய நெஞ்சங்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்ரும் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமாந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.