2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அந்தோனியப்பு சில்வேஸ்ரர்
(பெரியவன் அண்ணாவியார்)
வயது 70
அமரர் அந்தோனியப்பு சில்வேஸ்ரர்
1952 -
2022
Passaiyoor, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும்,கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனியப்பு சில்வேஸ்ரர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."
-யோவான் 11:25
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!
இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஈராண்டில் மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
காவல் தெய்வமாய் இன்றுவரை
எங்களை பாதுகாத்து வந்த நீங்கள்
இனியும் எம்மோடு என்றும் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருப்போம்...
தகவல்:
குடும்பத்தினர்
அண்ணை எங்கள் எல்லோரையும் விட்டு விட்டுப் போய் விட்டீர்கள். உங்கள் படத்தைப் பார்க்கும் போது முன்னால் நிற்பது போன்ற பிரமை. அக்டோபரில் சந்தித்த போது மஞ்சு நில்லு நில்லு என்று சொன்ன வார்த்தைகள் இன்னும்...