யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனியப்பு சில்வேஸ்ரர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால் உம் பிரிவை
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
உங்களையே உலகமென
உறுதியாய் நம்பியிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் அப்பா!
உங்களுக்கே பிள்ளைகளாய்
பிறக்கும் வரம் வேண்டும் எங்களுக்கு!
உங்களின் ஒழுக்கமும் நற்பண்புகளும்,
மதிப்புகள் யாவும், எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாய் இருக்கவேண்டும்!
உங்கள் ஆசீருடன்!
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அண்ணை எங்கள் எல்லோரையும் விட்டு விட்டுப் போய் விட்டீர்கள். உங்கள் படத்தைப் பார்க்கும் போது முன்னால் நிற்பது போன்ற பிரமை. அக்டோபரில் சந்தித்த போது மஞ்சு நில்லு நில்லு என்று சொன்ன வார்த்தைகள் இன்னும்...