யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னபூரணம் ஞானசம்பந்தர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-09-2022
ஆண்டு ஒன்று சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம் அம்மா!
சோதனைகள் வரும்போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி
சொன்ன வார்த்தைகள் எங்கள் முன்னே
சொர்க்கத்தை போல் காதினில்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அம்மா!
எங்களுக்கு வாழ வழிகாட்டிய
எங்கள் அம்மா எம் தேவைகள்
அனைத்தையும் நிறைவேற்றி விட்டு
எம்மை விட்டுப் போக உங்களுக்கு
எப்படி மனம் வந்தது அம்மா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Malathy, Please accept our heartfelt condolences. May God give you the strength to bear the loss of your loved one. Our condolences to the rest of the family as well. May her soul rest in peace.