1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அன்னம்மா திருநாவுக்கரசு
(மகேஸ்வரி)
வயது 97
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், பிரான்ஸ் Nancy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-05-2026
ஆண்டு ஒன்றாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள்
போனாலும் மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடி
நாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே அம்மா!
பத்துமாதங்கள் பக்குவமாய் வயிற்றில்
சுமந்து சத்துள்ள உணவுவகைகளை
அறுசுவைக்குன்றாது நித்தம்
ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு சென்றது
எங்கே அம்மா!!
அவளருகில் இருந்தால் அகலும்
நம் நோய்நொடி அம்மா என்பவள்
ஓர் அதிசயம் அவளே எம்
இனிய அரும்பொக்கிஷம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
மகேஸ் அக்காவின் பிரிவிற்கு அவரின் குடும்பத்திற்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். பார்வதி அம்மா குடும்பம் உரும்பிராய் தெற்கு