யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் அமிர்தமணி அவர்கள் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் தலைமகளும், காலஞ்சென்ற நடராசா, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்னலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தி, சுகதரன்(சுகன்), சுசிதரன்(சுசி), சுயாதரன்(சூட்டி), சுமதி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
ரகுநாதன்(யோகா), தவக்குமார், தயாநிதி, கீதா, கௌரி ஆகியோரின் அன்பு மாமியும்,
பாலவர்ணம்(பாலன்), சிகாமணி, தேவகியம்மா(தேவி), மரகதம்(சகுந்தலா), காலஞ்சென்ற செல்லமணி, திருச்செல்வம்(செல்வராசா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நவம், காலஞ்சென்ற ஞானி, தருமேஸ்வரி, காந்தன், ஈசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிந்துஜன், மிதுஜன், அபிரா, கவின், அதேஸ், சாதுஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கனீர்த்தி, சுயாத், தியா ஆகியோரின் ஆசை அப்பத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மா எங்கு சென்றாய் எம்மை விட்டு
அழுகின்றோம் விம்முகின்றோம் அரவணைக்க தாயே நீ இல்லை
இறைவன் எமக்கு தந்த முகவரி உன் முகம் தானே
எங்கள் உயிர்காத்த அம்மாவே எங்கு சென்றாய் எமைவிட்டு
எப்போது அம்மாவே நீ வருவாய் எமை அணைக்க
அழுகின்றோம் அழுகின்றோம் எம் தாயே எங்குசென்றாய் எமைவிட்டு
உதிரத்தை பால் ஆக்கி எமை வளர்த்தாய் உனை
பிரிந்து உம் பிள்ளைகள் வாடுகின்றோம்
லட்சுமி என்று உமை நாம் செல்லமாக அழைப்போமே
அப்போது நீ சிரிக்கும் சின்ன சிரிப்பை எம்போது நாம் பார்ப்போம்
உறங்கிடு தாயே அமைதியாய் உன் பிள்ளைகளின் நினைவினிலே
எம்மை விட்டு நீ செல்லவில்லை எம்மோடு நீ இருப்பாய்
அமைதியாய் உறங்கிடு அம்மாவே
உன் ஆத்மா சாந்தி அடைந்திடுமே!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
I was saddened to hear that your () passed away. My thoughts are with you and your family.