யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நாவலர் வீதியை வதிவிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரெத்தினம் அன்னலெட்சுமி அவர்களின் நன்றி நவிலல்.
மாதமொன்று முழுசாய் கடந்தும்
மனதில் ஈரமாய் இன்னும் உன் நினைவுகள்
ஏது பிழை நாம் செய்தோமென்று
எமை விட்டுப் போனாய் அம்மா
சூதுவாது அறியாத சோதி போன்ற உன் முகத்தை
காண ஒரு தரமேனும் கண்விழிக்க மாட்டாயா??
பேதலித்து நிற்கின்றோம்
பெருமை எல்லாம் தந்த தாயே!!!
அன்னலட்சுமியாய் வாழ்ந்த தாய்
அவசர சிகிச்சை பிரிவில் இருந்து
பின்னே உயிர் பிரிந்து
போன செய்தி கேட்டவுடன் எம்
இல்லம் விரைந்து எமை தேற்றி
எல்லாமுமாய் நின்ற உறவுகளே, நண்பர்களே
என்ன சொல்லி உமை போற்ற
இரு கரம் கூப்பி வணக்குகிறோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Om Shanthi!!!! Om Shanthi!!! Om Shanthi!!!