மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும், கொண்ட அன்னலட்சுமி பொன்னப்பா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பாசத்தின் உறைவிடமாய் ஒளிவீசிய எங்கள் அன்பு அம்மாவின் மறைவைக் கேட்டு நேரில் வருகை தந்தும் மலர்க்கொத்துக்கள், மலர் வளையங்கள், மாலைகள் சமர்ப்பித்தும், குறிப்பாக எம் அனைவருக்கும் உணவு தந்தும், உள்நாடு வெளிநாடுகளிலும் இருந்து தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டும், இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்ட அன்பு உள்ளங்களுக்கும், எம் தாயாரின் ஆத்ம சாந்திக் கிரியைகளில் பங்கு கொண்டோருக்கும், அந்தியேட்டி, சபிண்டீகரணக் கிரியைகளில் பங்கு கொண்டு எம் தாயாரின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தித்த அன்பு உள்ளங்களுக்கும்,
எமக்கு பல வழிகளில் உதவிகள் வழங்கிய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் மற்றும் எமது தாயாரின் இறுதி நாட்களில் அவர் Kings George Hospital இல் அனுமதிக்கப்பட்டிருந்த போது இரண்டு வாரங்களாக அவரைத் தன் தாய் போலப் பராமரித்து எமக்கும் ஆறுதல் வார்ததைகள் கூறிய டாக்டர் நிரஞ்சன் அவர்களுக்கும், எம் தாயாரின் இறுதிச்சடங்கில் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய ஸ்ரீசெல்வவிநாயகர் ஆலயத்தினருக்கும், லண்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தினருக்கும், மல்லாகம் மக்கள் மன்றத்தினருக்கும், குறுகிய காலத்தில் இந்த நினைவு மலரை அச்சிட்டுத்தந்த ஜே ஆர் அச்சகத்தினருக்கும், எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.