2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அன்னலட்சுமி பொன்னப்பா
வயது 91
Tribute
20
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அன்னலட்சுமி பொன்னப்பா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-12-2021
ஓர் உணர்வான ஒற்றை சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..
அம்மா? என்று குரல் எழுப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியவில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கின்றீர்கள் அம்மா…
எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டுகள் இரண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து கொண்டு இருக்கின்றோம்
அம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்