7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Land Sissach ஐ வதிவிடமாகவும் கொண்ட அனித் சதாசிவம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிப்பிக்குள் முத்தாய்
அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செல்கதிர்
சுடரே ஆண்டு 7 கடந்த பின்பும்
ஓயவில்லை நினைவலைகள்....
நீ வளமோடு வாழ்வாய் என
வாஞ்சையுடன் நாங்கள்
கண்ட கனவு ஏராளம்...!
கண்இமைப் பொழுதிலே
எம் கனவுகளை எல்லாம் கனவாக்கி
கண் மறைந்து போனாயே
மனதை ஆழ்ந்த துயரில் ஆக்கிபோனாய் -
எம் அன்புச் செல்வனே...
பெத்தவர்கள் தவிக்கிறார்கள்
உடன் பிறந்தவள் துடிக்கின்றாள்!
நீ மீண்டும் உதிர்ந்து வருவாயென
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உன் நினைவுகள் எங்களை விட்டு பிரியாதடா?
உன் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்