Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 AUG 1939
இறப்பு 10 JUL 2025
அமரர் அமிர்தவல்லி இராஜரட்ணம்
வயது 85
அமரர் அமிர்தவல்லி இராஜரட்ணம் 1939 - 2025 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், கனடா Guelph ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமிர்தவல்லி ராஜரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஓராண்டு ஆனதம்மா!

பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??

துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே தாயே
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளிக்கூடத் துவழாமல் தூக்கிவிட்ட தாயே!
எங்கள் மாமியே- நீங்கள்
எம்மைவிட்டு பிரிந்து ஆண்டு ஒன்று ஆனதோ!
பேரப்பிள்ளைகள் நாம் இங்கு
நீங்களின்றி தவிக்கின்றோம்!

நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டுகள் பல சென்றாலும் - அகலாது
உங்களின் நினைவுகள் எம்மை விட்டு!

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்கள்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டபிள்ளைகளாக
நாங்கள் இருக்க வேண்டும் அம்மா!

அம்மா நீங்கள் இல்லாமல்
உங்கள் பூத்தோட்ட பூக்கள் எல்லாம்
உங்களை தேடி தவிக்கின்றன அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

ஓராண்டு நினைவஞ்சலியும் நன்றியுரையும்:

அம்மாவின் மறைவுச் செய்தியை அறிந்தவுடன், நீங்கள் ஒவ்வொருவரும் கூறிய ஆறுதல் வார்த்தைகள், நேரில் வந்து எங்களுக்கு ஆறுதல் அளித்தது, உணவு கொண்டு வந்து பரிமாறியது, பூக்கள் மற்றும் மலர்வளையங்கள் செலுத்தியது, இறுதிச் சடங்குகள் மற்றும் கிரியைகளில் கலந்து கொண்டு எங்கள் துயரத்தில் பங்கெடுத்தது ஆகிய அனைத்திற்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் அன்பும் ஆதரவும் அந்தக் கடினமான நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த மனவலிமையையும் ஆறுதலையும் அளித்தது. அதற்காக என்றும் நன்றிக்கடன்பட்டவர்களாக இருப்போம். அம்மாவின் 31வது நாள் நினைவஞ்சலியையொட்டி நடைபெற்ற நன்றி மதிய உணவு நிகழ்வில், உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி வந்து, உங்கள் அன்பையும் ஆதரவையும் மீண்டும் வெளிப்படுத்தியதற்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓராண்டு மட்டுமல்ல, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், இந்தத் துயரமான காலத்தில் நீங்கள் எங்களுக்காக செய்த உதவிகளும், காட்டிய அன்பும், அளித்த ஆறுதலும் எங்கள் மனதில் என்றும் அழியாத நினைவாக நிலைத்திருக்கும். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி. அன்பே சிவம்… 🙏🏾

One-Year Memorial and Message of Gratitude On behalf of our family, we would like to express our heartfelt gratitude to each and every one of you for your love, support, and kindness following the passing of our beloved mother. From the moment you learned of her passing, your words of comfort, your presence with us during our time of grief, the meals you lovingly prepared and served, the flowers and wreaths you offered, and your participation in the funeral and memorial rites meant more to us than words can express. By sharing in our sorrow, you brought us strength, comfort, and hope during one of the most difficult times in our lives. We will always remain deeply grateful for your compassion. We also extend our sincere thanks to everyone who took the time to attend the thanksgiving luncheon held in conjunction with our mother's 31st-day memorial service. Your presence once again reflected your love, care, and unwavering support for our family. Whether one year has passed or many more years go by, the kindness you showed, the help you offered, and the comfort you gave us during this difficult period will forever remain an unforgettable part of our hearts. Once again, on behalf of our entire family, we extend our heartfelt thanks to all of you. Thank you. Love is Divine... 🙏🏾

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 11 Jul, 2025