எமக்கு உயிர் தந்த அம்மா! தவிக்கின்றோம் நீங்கள் இன்றி...!
மனசு பாரமாய் உள்ளபோது
பரிவுடன் பழக நீங்கள் இல்லை!
ஆற்றல் இழந்த எம் நிலையை
ஊக்கபடுத்த நீங்கள் இல்லை!
எம் தவறுகளை துல்லியமாய்
தடைசெய்ய நீங்கள் இல்லை!
காற்றோடு பூ உறவாடுவதை போல-எங்கள்
மனதோடு மனம் உறவாட நீங்கள் இல்லை அம்மா!
காற்று எத்திசையில் திக்கிமுக்கி திரிந்தாலும்
என்றும் பூவின் வாசத்தை இழக்காது!
நாம் உங்கள் பிள்ளைகள் உங்கள் வாசத்தை
தவிர வேறு சுவாசத்தை சுகிக்கமாட்டோம் அம்மா....!
எ
என்றும் உங்கள் அன்புக்கு ஏங்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அன்னாரின் பிரிவுச்செய்தி அறிந்ததும் விரைந்து வந்து உதவிய அனைவருக்கும் இறுதிக்கிரியைகளில் கலந்தும், நேரிலும், தொலைபேசி மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், சகல வழிகளிலும் எமக்கு உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றோம்.