5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அழகரத்தினம் நல்லையா
1945 -
2021
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver BC ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அழகரத்தினம் நல்லையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே
நீங்கள் பிரிந்து ஐந்து வருடம்
ஓடிப்போனது இன்னமும் நம்பவே
முடியாமல் நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
உழைப்பை உரமாக்கி பாசமாய்
பணிவிடைகள் பல செய்து வாழ்க்கை
எனும் பாடத்தை எமக்கு கற்றுத்
தந்த எமது உயிர் தந்தையே
ஐந்தாண்டு கடந்தும் உங்கள்
நினைவுகள் எமை தினமும்
வாட்டி வதைக்கின்றது அப்பா..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்