Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 26 JUN 1935
விண்ணில் 03 MAY 2022
அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்)
ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை, முன்னாள் செயலாளர்- தமிழ் தொழிற்சங்க கூட்டணி, முன்னாள் செயலாளர்- உலக சமாதான சபை, தமிழ்த்தொண்டர், அனைத்துலகத் தொடர்புச் செயலாளர் - த.தே.கூ.பிரி.கிளை
வயது 86
அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி 1935 - 2022 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:22/04/2023

ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்

அப்பா என்ற வலிமையை நீங்கள் இல்லாத
காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த
 வரமாக நீங்கள் இருந்தீர்கள்!

உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய் இருந்துகொண்டே இருக்கும்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 05 May, 2022
நன்றி நவிலல் Thu, 02 Jun, 2022