

திரு ஆறுமுகம் கனகசிங்கம்
1940 -
2024
சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கனகசிங்கம் அண்ணர்
Mr Aarumukam Kanakasingam
சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka
கலகலப்பாக பேசும் மனிதர் இவர், இவர் இருக்கும் இடம் எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். ஆங்கில மொழியில் பேசுவதில் வல்லவர், இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்புக்களில் இவரது ஆங்கில மொழிவன்மை பலரின் கைதுகளை தவிர்த்திருந்தது. சிறியவர் பெரியவர் எனும் வேற்றுமை பார்க்காது எல்லோருடனும் சகஜமாக பழகும் மனம் படைத்தவர். 84 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக எமது ஊரை சைக்கிளில் வலம்வரும் இவரது திடீர் மறைவை மனம் ஏற்க மறுக்கிறது. கனகசிங்கம் அண்ணரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர் நண்பர்களுக்கும் எமது ஆறுதலை தெரிவிப்பதோடு, அன்னாரது ஆன்மா சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவரின் திருவடிகளில் அமைதிபெற வேண்டுகிறோம்
Write Tribute
May their soul find eternal rest and their memory live on in our hearts.