
கர்நாடக இசையின் எல்லைகளைத்தொட்டு நிறைந்த இசை ஞானத்துடன் எங்கள் பண்பாட்டுக்கு பெருமை சேர்ந்தவர் இசைக்கலைஞர் கருணாகரன் அவர்கள். தந்தை வழியான இசைநாடக பாரம்பரிய ஆற்றலுடன் தமிழகத்தின் இசைக்கலை பேராளுமைகளிடம் முறையான கல்வியை கற்று எங்கள் தேசத்து இசைக்கலை வளர்ச்சியில் தனித்துவமாய் பணியாற்றியவர் ;எங்கள் பல்கலைக்கழகத்து இராமநாதன் நுண்கலைக்கழகம் ,இலங்கை வானொலி,ஆலாபனா -இசை மேம்பாட்டுக்கான செயற்பாட்டு நிறுவனம் என அவரது பணிக்களங்கள் விரிந்தவை. அவருடன் பழகிய ,அவர் பணிகளில் நெருங்கி செயற்பட்டபொழுதுகளும் ,அவரிடம் பாடம் கேட்க வாய்த்த பெரும் பேறும் என்றென்றும் நெஞ்சிலே போற்றிக்காக்கப்படுவன. ஈடுசெய்யமுடியாத பேரிழப்பில் தவிக்கும் அவர் குடும்பத்தினருடனும் இசை உலக உறவுகளுடனும் என் ஆத்ம அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றேன்
காலஞ் சென்ற மரியாதைக்குரிய கருணாகரன் அவர்களின் மறைவை அறிந்ததும் சக கலைஞர் என்ற முறையில் அவருடன் பணியாற்றிய பொன்னான காலங்களை எண்ணி நினைவு கூறுகின்றேன்.அவரின் கர்நாடக சங்கீதத்திற்கான முயற்சிகளும்,...