
திதி : 21-05-2025
யாழ். மட்டுவில் தெற்க்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் நடேசபிள்ளை அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பதினைந்து கடந்தாலும்...
நெஞ்சத்தில் நீங்காத நினைவாய்...
கண்ணுக்கு ஒளியாய்...
நிலையாய் என்றும் எங்களோடு...
எங்களின் இறையாய்-என்றும்...
எங்களை தடம்மாறாமல் வழி நடத்த...
வணங்குகின்றோம் அப்பா...
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்...
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!