1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
24
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி சிற்றம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-07-2022
திதி வெண்பா
ஆண்டு பிலவ அமைந்த ஆடித்திங்கள்
பூண்ட பூர்வபக்க துவிதியையில் - மாண்பு
சிற்றம்பலம் பத்தினியார் புவனேஸ்வரி அம்மை
சிற்றம்பலவன் தாளடைந்தார் காண்.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத சுடராய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி உறவிலே
கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Dear Puvanes mami Rest in peace. You will be very happy and proud to know that your children, their partners and your grand children have all performed the Hindu rituals every month since your...