யாழ். மல்லாகம் பங்களா ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் ஞானேந்திரம் அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே
என்னருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததடா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 17-07-2021 சனிக்கிழமை அன்று கிரிமலையில் நடைபெறும்.
தகவல்: சகோதரி - நிரஞ்சனி(செல்லா), சகோதரன் - தனேந்திரன்(பேபி), சகோதரன் - குகேந்திரன்(றஞ்சி)