யாழ். மல்லாகம் பங்களா ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் ஞானேந்திரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 06-07-2022
பாதம் பணிகின்றோம்
உள்ளம் எல்லாம் உங்கள் நினைவு
உறங்கும் விழிகளுக்குள்ளும் உங்கள் இருப்பு
ஓராண்டு கழிந்தனவோ அண்ணா,
நம்ப முடியவில்லை நேற்றுப் போல் இருக்கிறது
நீங்கள் எங்களை விட்டுச் சென்ற அந்த இறுதி நாள்
கண்ணுக்குள் இருப்பதால் எங்கே பார்த்தாலும்
உங்களைத்தான் காண்கின்றோம்
மூவருக்கும் முன் பிறந்தீர்கள்
வாழ்ந்தவரை போதும் என்றோ வழி சென்றீர்கள்
அம்மாவின் விழிகளில் ஆறா துளிகள்...
தந்தையின் நெஞ்சில் தாழாத் துயர்...
சகோதர சகோதரியிடம் குன்றா நினைவுகள்
மீழ முடியவில்லை மீழவும் விரும்பவில்லை...
உங்களின் நினைவலையில் நித்தம்
விழி நனைந்த அப்பா
உங்களை காண அங்கே வந்தாரோ!!
இன்றவர் இங்கில்லை அண்ணா
உங்களின் இழப்பும் தந்தையின் இழப்பிலும்
ஆற்றொணா மீழா துயரில்
மூழ்கி துடிக்கின்றோம்
எங்களால் நிமிர்ந்தெழ முடியவில்லை
முற்றத்தின் சுற்றத்தில்
எங்களோடு நீங்கள் வாழ்ந்த காலங்கள்
பசுமை குன்றாதவை
மழலைகளாய் கூடி
விளையாடிய விளையாட்டுக்களும்
பள்ளி சென்று கல்வி கற்று வந்த
சிட்டுக்குருவிகளின் காலமும்
தாய் மாமாவின் டிஸ்பென்சறியில்
மருந்து தரும் சேவகமும்
நாகதம்பிரானின் சிறப்பு
பொங்கல் பூசைகள் நினைந்து
நித்திய விளக்கேற்றும் ஆன்மீகமும்
என்றென்றும் உங்களை விட்டு நீங்காதவை
உங்களின் நிழல் தேடுகின்றன
இறைவன் திருவருளால்
மீண்டும் நாம் ஒரேதாயின்
பிள்ளைகளாய் பிறந்து
ஒன்று கூடி நன்றே வாழ
உங்களின் ஆத்மா சாந்தி திதி நாளில்
மலர்கள் சொரிந்து
இறைவன் திருப்பாதம் பணிகின்றோம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நம சிவாய அன்பே சிவம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு கடந்த வருடம் நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.